திருவிழாவில் தனியார் அறக்கட்டளை: இந்து முன்னணி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
By : Thangavelu
தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்கல தேவி கண்ணகி திருக்கோயில் திருவிழாவை தனியார் அறக்கட்டளை மூலமாக நடத்தப்படுவதை உடனடியாக திமுக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் - கூடலூர் ஸ்ரீமங்கல தேவி கண்ணகி திருக்கோயில் திருவிழாவை தனியார் அறக்கட்டளை மூலமாக நடத்துவதை தடுத்து நிறுத்தி தமிழக அரசே திருவிழாவை நடத்த வலியுறுத்தியும் ,பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் இந்துமுன்னணி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.#இந்துமுன்னணி #தேனி pic.twitter.com/rqqY5m73fI
— Hindu Munnani (@hindumunnaniorg) April 2, 2022
தேனி மாவட்டம், கூடலூர் ஸ்ரீமங்கல தேவி கண்ணகி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நடத்துவதற்கு தனியார் அறக்கட்டளைக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இந்து முன்னணி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
இது பற்றி இந்து முன்னணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; தேனி மாவட்டம், கூடலூர் ஸ்ரீமங்கல தேவி கண்ணகி திருக்கோயில் திருவிழாவை தனியார் அறக்கட்டளை மூலமாக நடத்துவதை தடுத்து நிறுத்தி தமிழக அரசே திருவிழாவை நடத்த வலியுறுத்தியும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரகோரியும் இந்து முன்னணி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Source, Image Courtesy: Twiter