Begin typing your search above and press return to search.
பெண்களுக்கு மரியாதை அளிக்கும் சமூகம்தான் சிறந்து விளங்கும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!

By :
பெண்களுக்கு மரியாதை அளிக்கும் சமூகம்தான் சிறந்து விளங்கும் என்று தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் பேத்தி ஸ்மிர்த்தி மற்றும் அவரது தோழி மகதி ஆகியோர்களின் பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி கவுரவித்தார். அது மட்டுமின்றி ஸ்மிர்த்தி எழுதிய புத்தகத்தையும் வெளியிட்டார். இதன் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: கல்வி ஒரு குழந்தையை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றாலும், அதனுடன் ஒரு நடனமோ அல்லது இசையோ, ஓவியமோ கற்றுக்கொள்கின்ற போது வாழ்க்கை மேலும் சிறந்து விளங்கும் என்றார்.
Source, Image Courtesy: Polimer
Next Story