Kathir News
Begin typing your search above and press return to search.

பனை மரங்களை சாய்த்து மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல்: கண்டு கொள்ளாத தி.மு.க. அரசு!

பனை மரங்களை சாய்த்து மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல்: கண்டு கொள்ளாத தி.மு.க. அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2022 7:26 AM GMT

திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி உள்ளது. அங்கு அரசு அனுமதி பெறாமல் பனைமரங்களை வெட்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் திட்டுகள் உள்ளது. தமிழகத்தில் எங்கும் கிடைக்காத அரியவரை தேரி மணல் இப்பகுதியில் உள்ளது. இதனை அரசு பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியில் அமைந்துள்ள தேரி பகுதியில் மர்ம நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பு பணிக்காக அந்த இடத்தை சுற்றி அடைத்து வைத்து பரமன்குறிச்சி கஸ்பாவைச் சேர்ந்த சரவணன் என்பவர் அது தன்னுடை சொந்தமான இடம் எனக் கூறி அரசு அனுமதி இல்லாமல் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணலை விற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அது மட்டுமின்றி பனைமரங்கள் வேறோடு சாய்க்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி சுமார் 35 கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பனை மரங்களை வெட்டக்கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அப்படி இருந்தும் திருச்செந்தூர் பகுதிகளில் மரத்தை வெட்டி மணல் கடத்தி வருகின்றனர். இதனை ஏன் அரசு தடுத்து நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Polimer

Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News