"உங்கள் உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இலங்கைக்கு துரோகம் செய்யாதீர்!" இலங்கை போராட்ட களத்தில் இருந்து ஸ்டாலினுக்கு எச்சரிக்கை!
By : Dhivakar
"உங்களது உதவி இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சிங்களவர்களுக்கானதாக இருத்தல் வேண்டும்" என்று, இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து போராடும் பொதுமக்களில் ஒருவர் கூறும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கை நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக மக்களின் அன்றாட செலவினங்கள் உச்சத்தில் செல்ல, அந்நாட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனை அடுத்து அந்நாட்டு தலைநகர் கொழும்பூரில், குடியரசுத் தலைவர் செயலகம் செல்லும் முக்கியச் சாலையில், போராட்டக்காரர்கள் வெள்ளம் போல் திரண்டு தங்களின்கோஷங்களை பதாகைகள் மூலமும், ஆக்ரோஷமாக குரல் எழுப்பியும் போராடி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை வாழ் தமிழர்களை மீட்க உதவ முன்வருவது போன்ற செய்திகள் வெளியாகின.
அதற்கு எதிர்வினையாக கொழும்பூவில் போராட்டக் களத்தில் இருந்து ஒருவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு : இங்கு போராடுபவர்கள் சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். நீங்கள் உதவ முன் வர வேண்டும் என்றால், அனைவருக்கும் உதவ வேண்டும். தமிழர்களுக்கு மட்டும் உதவ முன் வரக்கூடாது. உங்கள் உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இலங்கைக்கு துரோகம் செய்யாதீர்!
என்று காணொளியில் தடாலடியாக ஒரு இளைஞன் கூறியுள்ளார்.
#SriLanka: Protestor's response to TN CM Stalin's offer to send help to Tamils in #lka, amid #SriLankaEconomicCrisis.
— Meera Srinivasan (@Meerasrini) April 10, 2022
'We are here protesting together. We are Sinhala, Tamil, Muslim, Christian, all. If you're sending help, let it be for all of us, not just Tamils.'@the_hindu pic.twitter.com/bK8DntBgkT