Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இரண்டு கிறிஸ்தவப் பள்ளிகளின் மீது அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்! ஊடகங்கள் கப்சிப்!

தமிழகத்தில் இரண்டு கிறிஸ்தவப் பள்ளிகளின் மீது அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்! ஊடகங்கள் கப்சிப்!
X

DhivakarBy : Dhivakar

  |  11 April 2022 8:15 PM IST

தமிழகத்தில் இரண்டு கிறிஸ்தவப் பள்ளிகளில், இரண்டு கிறிஸ்துவ ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி எவான்ஜிலிகன் லுத்தரன் சர்ச்சால் நடத்தப்படும் பள்ளி ஆகும். அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமஸ் சாமுவேல் என்ற கிரிஸ்துவர் 2012ஆம் ஆண்டு முதல் அப்பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் வற்புறுத்தலுக்கு மாணவிகளை ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தன் பெற்றோரிடம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து சாமுவேல் அப் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.


மற்றொரு சம்பவமாக, ராமநாதபுர மாவட்டம், திருவரங்கம் பகுதியில் புனித இருதய மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியராக பணிபுரியும் ஆரோக்கிய அருள் தாமஸ் என்பவர். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்வு எழுதும் மாணவி ஒருவரிடம் "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது" என்று கூறி மாணவியின் கையை பிடித்து தாமஸ் இழுத்ததாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார். பின்பு பாதிக்கப்பட்ட அந்த மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறியபோதும் தலைமையாசிரியர் தாமசை கண்டிக்க மட்டும் செய்துவிட்டு எந்த ஒரு நடவடிக்கையும் தலைமையாசிரியர் எடுக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் இதுகுறித்து புகார் அளிக்கவே, தாமஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் அடுத்தடுத்து, கிறிஸ்தவ பள்ளிகளின் மீது பாலியல் புகார்கள் பாய்ந்து வருவது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Hindu post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News