Kathir News
Begin typing your search above and press return to search.

"எங்கள் நாடு அழிந்துவிட்டது, ஒரு ஓரமாக தமிழ்நாட்டில் வாழ்ந்து விடுகிறோம் " இலங்கை அகதிகள் குமுறல்

எங்கள் நாடு அழிந்துவிட்டது, ஒரு ஓரமாக தமிழ்நாட்டில் வாழ்ந்து விடுகிறோம்  இலங்கை அகதிகள் குமுறல்

DhivakarBy : Dhivakar

  |  22 April 2022 1:30 PM GMT

"மனிதர்கள் வாழக்கூடிய தகுதியை எங்கள் நாடு இழந்து விட்டது. கடவுள் தான் எங்களை தனுஷ்கோடிக்கு அழைத்து வந்துள்ளார்" என இலங்கையிலிருந்து வந்த பெண் அகதி கண்ணீருடன் பேசியுள்ளார்.


இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விலை மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததால், அங்கு வசிக்கும் அனைத்து தரப்பட்ட மக்களும் பசி மற்றும் பட்டினியால் வாடி வருகின்றனர். இதனையடுத்து இலங்கையில் போராட்டம் வெடித்து கலவர பூமியாக காட்சி அளித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையிலிருந்து அகதிகளாக பலர் தனுஷ்கோடி நோக்கி வரத் தொடங்கிவிட்டனர்.

இதன் வரிசையில், நேற்று நள்ளிரவு படகுகளில் கைக்குழந்தைகளுடன் 13 நபர்கள் தனுஷ்கோடி வந்தடைந்தனர். உடனே அவர்களை கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று உணவு வழங்கினர்.


இதனையடுத்து, காலை அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு அகதிப் பெண் " நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறோம். நாங்கள் மொத்தம் மூன்று குடும்பங்கள். எங்களது வீடு மற்றும் நிலங்களை விற்று 5லட்சம் எடுத்து வந்துள்ளோம். கடவுள் புண்ணியத்தில் தனுஷ்கோடி வந்தடைந்தோம். இலங்கை மனிதர்கள் வாழ தகுந்த நாடல்ல. ஆட்சியாளர்களின் சுயநலத்தால்தான் இலங்கைக்கு இத்தகைய கதி. இனி நாங்கள் இலங்கை திரும்ப மாட்டோம். தமிழ்நாட்டில் ஒரு ஓரமாக வாழ்ந்து விடுகிறோம்."

என்று பெண் அகதி கண்ணீர் மல்க கூறினார்.


J Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News