இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிறிஸ்தவ இருபிரிவு மக்களிடையே தகராறு - இறுதிசடங்கில் கூட பிரிவினைவாதம்
By : Thangavelu
திருப்பூரில் இறந்த ஒருவரின் உடலை கிறிஸ்தவர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் உடலை நடு ரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவரில் உடலை கிறிஸ்தவ இடுகாட்டில் அடக்கம் செய்வதில் இரு பிரிவினரிடையே பிரச்னை #Tirupur #Protest pic.twitter.com/85GuwIwmPt
— Polimer News (@polimernews) April 22, 2022
பெருந்தொழுவு பகுதியில் வயது மூப்பு காரணமாக காலமான ஞானபிரகாசம் என்பவரின் உடல் அருகில் உள்ள கரடு புதூர் ரோடு பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவினர் அந்த கல்லறை தோட்டத்தில் ஞானபிரகாசின் உடலை புதைக்க அனுமதி இல்லை என்று வாக்குவாதம் செய்தனர்.
இதனால் பெருந்தொழுவு நான்கு ரோட்டில் ஞானபிரகாஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னரே ஞானபிரகாஷின் உடல் அதே கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Source, Image Courtesy: Polimer