ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்று கூறிய பள்ளி - களத்தில் இறங்கிய இந்து முன்னணி!
By : Thangavelu
செங்கல்பட்டு மாவட்டம், மலையம்பாக்கத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்று கூறிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர் ஜெனிபர் என்பவரை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மலையம்பாக்கம் உயர் நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர் ஜெனிபர் என்பவர் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்று கூறியதை கண்டித்து இந்துமுன்னணி பள்ளியில் புகார் மனு மற்றும் பேச்சுவார்த்தை.#இந்துமுன்னணி #மதமாற்றம் #HinduMunnani #செங்கல்பட்டு pic.twitter.com/Ry6BfdbUvn
— Hindu Munnani (@hindumunnaniorg) April 28, 2022
செங்கல்பட்டு மாவட்டம், மலையம்பாக்கம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளராக ஜெனிபர் என்பவர் உள்ளார். அவர் இந்து மாணவர்கள் அனைவரும் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இது பற்றி மாணவர்கள், தங்களின் பெற்றோர்களிடம் கூறினர்.
இதனை கேள்விப்பட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து, இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தது மட்டுமின்றி இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது என்ற பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Source, Image Courtesy: Twiter