Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சையில் அட்டூழியம் - இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

தஞ்சையில் அட்டூழியம் - இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
X

DhivakarBy : Dhivakar

  |  29 April 2022 2:50 PM IST

தஞ்சை: இளம்பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தஞ்சையில் ஒரு தனியார் நிறுவனத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். வேலை செய்து விட்டு தன் சொந்த ஊருக்கு திரும்பிய போது, "நானும் அந்த ஊருக்கு தான் செல்கிறேன் என் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள் " என்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் அந்தப் பெண்ணிடம் மிகப்பெரிய பொய்யைக் கூறி, அப் பெண்ணை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த இளைஞன் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.


இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அப் பெண், தஞ்சை வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறை மூன்று இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News