'சவுராஷ்டிரா மொழியில் பைபிள்' - மதுரையில் புதிய முறையில் மதமாற்ற மிஷனரிகள் முயற்சி!
By : Dhivakar
மதுரை : "சவுராஷ்டிரா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் நூல் வெளியிடும் நிகழ்ச்சியை, தடுத்து நிறுத்த வேண்டும்" என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் இந்திய நாட்டிற்குள் நுழைந்த பின், நாட்டில் உள்ள பிராந்திய மொழிகளை அழகாக கற்று, பைபிள் நூலை அந்தந்தப் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இந்த முயற்சி கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்நிலையில், மதுரையில் சவுராஷ்ட்ரா சமூகம் பெரும்பாலானோர் வசிக்கும் இடத்தில், இன்று சி.எஸ்.ஐ., மகிமை சர்ச்சில் 'இந்தியன் பைபிள் டிரான்ஸ்லேட்டர்' என்ற அமைப்பு, சவுராஷ்ட்ரா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் நூலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை முறியடிக்கும் விதமாக, ஹிந்து தர்மா பரிஷத் அமைப் பு, ஹிந்து முன்னணி, சவுராஷ்டிரா அரசியல் அமைப்பு மற்றும் சவுராஷ்டிரா விழிப்புணர்வு போன்ற அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மனு அளித்தனர்.
"தர்மத்தையும், வேதத்தையும் கடைபிடிக்கும் சவுராஷ்டிரா சமூகத்தினரை குறிவைத்து, மதமாற்றம் முயற்சி நடைபெறுகிறது.பைபிள் வெளியிடும் விழாவை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விழா நாளில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்." என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர்கள் கூறினர்.