அறநிலையத்துறை இருந்து என்ன பண்றது? கோயில் நிலங்களை கண்டறிய முடியவில்லையே! - திருத்தொண்டர் அமைப்பு வேதனை
By : Dhivakar
கிருஷ்ணகிரி: "இந்து சமய அறநிலையத் துறையின் உயர்பதவிகளில், நேர்மையானவர்களை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கவேண்டும்" என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோயில் நிலங்களில் நடந்து வரும் கிரானைட் கொள்ளைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை குறித்து பல விமர்சனங்களை எழுப்பினார்,
அதில் : கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் கண்டறியப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு இரண்டு ஆட்சி பணியாளர்கள், மாவட்டத்திற்கு ஒரு வருவாய் அலுவலர்கள் இருந்தும், இந்த நிலங்களை கண்டறிய முடியவில்லை என்றால் ஏன் அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கோயில் நில கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒருவர்கூட குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவில்லை.
யாரெல்லாம் துறையில் அதிக குற்றங்கள் செய்தார்களோ, அவர்கள் எல்லாம் தற்போது அறநிலையத் துறையில் உயர் பதவியில் இருந்து வருகின்றனர். அவர்களை புறந்தள்ளி விட்டு அமைச்சர் சேகர்பாபு நேர்மையானவர்களை நியமிக்க வேண்டும்"
என்று பேசினார் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்.