பொது வழிப்பாதையில் சுற்றுச்சுவர் எழுப்பும் 'அராஜக' பாதிரியார்! கிராம மக்களை மதமாற்றம் செய்ய அதிரடி முயற்சி!
By : Dhivakar
திருவள்ளூர்: 100 ஆண்டுகளாக கிராம மக்கள் பயன்படுத்திவந்தப் பொதுப் பாதையில், பாதிரியார் ஒருவர் சுவர் எழுப்பி "இது இயேசு பாதம் இடம்" என்று கிராம மக்களிடம் எச்சரிக்கை செய்த நிகழ்வு, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக சட்டவிரோத கட்டாய மதமாற்ற செயல் அரங்கேறி வருகிறது. இந்து மக்கள் அதிகம் வாழும் இடங்களை குறிவைத்து, சட்டவிரோத ஜெபக் கூடங்களும் சர்ச்சுகளும் எழுப்பப்பட்டு வருகிறது. "இதனை தடுக்க அரசு விரைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மத உணர்வாளர்கள் கோரிக்கைவிடுத்துவரும் நிலையில்,
திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவம்பாடி கிராமத்தில், கிராம மக்கள் மதம் மாற மறுத்ததால் நூறு ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்திவந்த பொதுப் பாதையில், சுற்றுச்சுவர் எழுப்பி "இது சர்ச்சுக்குச் சொந்தமான இயேசு பாதம் இடம்" என்று பாதிரியார் ஒருவர் அராஜக போக்கை கையாண்டு வருகிறார்.
இதை கண்டு கொதித்தெழுந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த கிராமவாசி ஒருவர் " மாதா கோயில் வழியாக பொதுப்பாதை ஒன்று உண்டு, அந்தப் பொதுப்பாதை வழியாக நாங்கள் 150 ஆண்டுகளாக சென்று வருகிறோம். திடீரென்று கடந்த மாதம் 22ஆம் தேதியன்று, புதிதாக வந்த பாதிரியார், பொதுப்பாதையில் சுற்றுச்சுவர் எழுப்பி வருகிறார். சுற்சுற்றுச்சுவர் ஏன் கட்டுகிறீர்கள்? என்று கேட்டபொழுது, "இது உங்களுக்கான உரிய இடம் இல்லை " என்று கறாராக பேசுகிறார். ஊராட்சி மன்ற தலைவர் சென்று பாதிரியாரை எச்சரித்தும் இதே பதிலை தான் கூறுகிறார். " நாங்கள் மதம் மாற கூறுகிறோம் அவர்கள் மதம் மாற மறுகின்றனர். அதனால் அவர்களுக்கு இந்த இடத்தை சொந்தம் கொண்டாட முடியாது" என்று அவர்கள் தரப்பிலிருந்து கூறுகின்றனர்.
என்று அந்த ஊர் கிராமவாசி ஒருவர், செய்தியாளரிடம் கூறினார்.