செவிலியர் மரணத்திற்கு நீதி - இந்து முன்னணி தலைவர் எச்சரிக்கை!
By : Thangavelu
செவிலியர் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்து முன்னணி பேரியக்கம் மாநிலத் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் முருகலட்சுமி. இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைவலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவான சிகிச்சை காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டு செவிலியர் தினத்தில் உயிரிழந்தார்.
#செவிலியர் மரணத்தில் மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை மதிக்காதது மட்டுமல்லாமல், இறந்து போனது ஒரு அரசு ஊழியர் என்ற எண்ணம் கூட இல்லாமல் அரசு மௌனம் சாதிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது- #இந்துமுன்னணி மாநிலந் தழுவிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்.https://t.co/YVjhBoz3Cb
— Hindu Munnani (@hindumunnaniorg) May 15, 2022
இவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் இணைந்து இந்து முன்னணி பேரியக்கம் கடந்த மூன்று நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், சிறுபான்மையினர் சினுங்கினாலேயே ஓடோடிச் சென்று உதவி செய்யும் தி.மு.க. அரசு, இறந்த செவிலியர் முருகலட்சுமி உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்காமல் மௌனமாக இருப்பது மிகவும் கண்டிக்தக்கது.
எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் ஒரு கோடி கொடுக்க வேண்டும், 5 கோடி கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்த ஸ்டாலின் தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் வேடிக்கை பார்ப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை மதிக்காமல் இருக்கிறது. இறந்தது ஒரு அரசு ஊழியர் என்கின்ற எண்ணம் இல்லாமல அரசு மௌனம் கப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter