கர்நாடகத்திற்கு சாமி சிலைகளை கடத்த முயன்ற கொள்ளையர்கள்! என்னென்ன சிலைகள் தெரியுமா?
By : Dhivakar
ஈரோடு : சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே, கர்நாடக தமிழக எல்லைப்பகுதியில் சாமி சிலைகளை கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து தொன்மையான சாமி சிலைகள் கடத்தப்பட்டு வருகின்றது. உலோகச் சிலைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கற்ச்சிலைகள் என அனைத்து தரப்பட்ட சிலைகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனை தடுக்க தமிழக காவல்துறை பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் வரிசையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி, தமிழக-கர்நாடக எல்லையில், தமிழக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கர்நாடகா எண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். அந்த வாகனத்தில் சோதனை செய்தபோது, ஒற்றைக்கால் அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் சிலையும், ஒரு அடி உயரம் கொண்ட ஏழு தலை நாகத்தின் மீது நின்று கொண்டிருக்கும் விநாயகர் சிலையும் கடத்தப்படுவது தெரிய வந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டத்தின் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து மைசூருக்கு சிலைகள் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.