Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் போதை கும்பலுடன் தமிழக மீனவர்களுக்கு தொடர்பு: அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தான் போதை கும்பலுடன் தமிழக மீனவர்களுக்கு தொடர்பு: அதிர்ச்சி தகவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 2:10 AM GMT

பாகிஸ்தான் போதை கும்பலுடன் தமிழக மீனவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கேரளா அருகே சர்வதேச கடல் பகுதியில் 1526 கோடி ஹெராயின் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கிய மீனவர்களுக்கு பாகிஸ்தான் போதை கும்பலுடன் நேரடி தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதை கும்பலுடன் மீனவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

கேரளா அருகே கடலில் பிடிப்பட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கொச்சி கடல் பகுதிகளில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடலோர காவல்படையினர் அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், லட்சத்தீவு அருகே ஈரான் நாட்டு கப்பலில் இருந்து இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுக்கு மூட்டை, மூட்டையாக ஹெராயின் போதைப்பொருட்கள் கைமாற்றப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது கடலோர படையினர் சர்வதேச கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது விசைப்படகுகளில் மீன்களை பதப்படுத்தி வைக்கப்படும் இடத்தில் ஹெராயின் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1,526 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு விசைப்படகுகளில் மொத்தம் 20 மீனவர்கள் இருந்தனர். அதில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 16 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பிடிப்பட்ட விசைப்படகுகளில் கன்னியாகுமரி மாவட்டம் வள்ளம்விளை பகுதியை சேர்ந்த விஜயன், சின்னத்துறையை சேர்ந்த ரிஷ்பன் என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதும், அங்கிருந்து கப்பல் மூலம் கடத்தி வரப்பட்டு இந்திய எல்லை கடல்பகுதிகளில் கை மாற்றி கொண்டுவரப்படுவதும் தெரியவந்தது. மேலும், கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் கவரில் பாகிஸ்தான் சீல் இருந்தது. எனவே தமிழக மீனவர்களுக்கும், பாகிஸ்தான் போதைப்பொருள் கும்பலுக்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பிடிப்பட்ட 20 மீனவர்களும் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News