தமிழகத்தில் மதநம்பிக்கைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: ஜனாதிபதி, பிரதமருக்கு தீட்சிதர்கள் கடிதம்!
By : Thangavelu
வெறுப்பு பிரசாரம் நடத்தும் குழுக்களின் போராட்டங்களால், எங்களது வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக ஜனாதிபதி, பிரதமருக்கு பொது தீட்சிதர் அமைப்பின் செயலர் மனு அனுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலர் ஹேமசபேச தீட்சிதர் அனுப்பியுள்ள மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொது தீட்சிதர்கள் கோயிலை நிர்வாகம் செய்து, பூஜைகளை செய்து வருகின்றனர். பண்டைய கால முதல் கோயிலின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அனைத்தும் பொது தீட்சிதர்களால் செய்யப்படுகிறது.
மேலும், சிதம்பரம் கோயில் மத செயல்பாடுகளை, பாரம்பரிய வழக்கப்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. எனவே கோயிலில் தீட்சிதர்கள் தேவாரம் ஓதுகின்றனர். ஆனால் சில குழுக்கள் இல்லை என்று பொய்யான பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர்.
சிலர் மத கடமை நம்பிக்கையில் தலையிட முயற்சி மேற்கொள்கின்றனர். இதனால் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் இருப்பதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் பாதிக்கப்படுகிறது. தீட்சிதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை முன்னின்று நடத்தும் போராட்டக் குழுக்களால் எங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தேவையின்றி போராட்டம் நடத்தப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே எங்களின் மத நம்பிக்கை மறறும் கடமை செயல்பாடுகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தீட்சிதர்கள் அளித்த புகாரில் கூறியுள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy: India Today