பிரான்சில் சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழர் பாரம்பரிய உடையில் நடந்தவர் எல்.முருகன் - பிரதமர் மோடி புகழாரம்!
By : Thangavelu
உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கெத்தாக நடந்து சென்றார் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்திற்கு ரூ.31,500 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். அப்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்து பேசும்போது, தமிழ்நாட்டின் கலாச்சாரம் உலகளவில் பரவியுள்ளது.
அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் சிவப்பு கம்பள வரவேற்பில் கெத்தாக நடந்தார். இவர் தமிழக பெருமையை பிரான்சிலும் நிலைநாட்டியவர் என்றார்.
Source, Image Courtesy: Twitter