தி.மு.க ஊழல் பட்டியல் தயார் - ரிலீஸ் எப்போது? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

By : Kathir Webdesk
தி.மு.க-வின் ஊழல் குறித்த பட்டியல் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இரு ஊழல் பட்டியலை அடுத்த மாதம் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களுக்கு பிரதமர் வந்த நாள் சரித்திர நாளாகும். தமிழக மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழ செய்துள்ளது. பிரதமர் வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். நிகழ்ச்சியில் தமிழ் கலாசாரத்தை தோளில் தூக்கி மண்ணை நேசித்து பிரதமர் பேசினார்.
பிரதமரின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள் விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்தி பிடித்திருக்கிறார் பிரதமர். சமூக நீதி பற்றி பிரதமர் இருந்த மேடையில் முதல்வர் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயமாகும்.
எல்.முருகன், பிரதமர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
Inputs From: Dinamalar
