Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளையும், தேசத்துரோகிகளை நெருங்குவதற்கு தி.மு.க. அரசு பயப்படுகிறது - சீறும் ஜீயர்

தீவிரவாதிகளையும், தேசத்துரோகிகளை நெருங்குவதற்கு தி.மு.க. அரசு பயப்படுகிறது - சீறும் ஜீயர்
X

ThangaveluBy : Thangavelu

  |  28 May 2022 1:43 PM IST

இந்துக்களுக்கு விரோதம் இல்லாமல் தி.மு.க. அரசு இருக்க வேண்டும் என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மன்னார்குடி ஜீயர் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பழனியில் ஆரத்தி விழா நடைபெறுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய தவறு. ஆரத்தி எடுப்பது இந்துக்களின் உரிமை ஆகும். மற்ற மதங்களுக்கு ஆதரவாக இருந்து விட்டு இந்துக்களை அவமதிக்காதீர்கள். இந்து கோயில் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.

மேலும், இந்து விரோதியாக நடந்து கொள்ள வேண்டாம். அப்படி செய்தால் நடக்க விட மாட்டோம். குஜராத்தில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பதை முன்னுதாரணமாக கூறுகின்ற தி.மு.க.வினர் பசுவதை தடை சட்டத்தை போன்று தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் யூடியூப் சேனல்களில் தவறான கருத்துக்களை கூறும், தீவிரவாதிகளையும், தேசத்துரோகிகளையும் நெருங்குவதற்கு இந்த தி.மு.க. அரசு பயப்படுகிறது. இவ்வாறு மன்னார்குடி ஜீயர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News