Kathir News
Begin typing your search above and press return to search.

எப்படி வருகிறது துணிச்சல்? சென்னை புளியந்தோப்பில் கோயிலை உடைத்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள்!

எப்படி வருகிறது துணிச்சல்? சென்னை புளியந்தோப்பில் கோயிலை உடைத்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 May 2022 1:31 PM GMT

சென்னை புளியந்தோப்பில் சக்தி வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர், கோயிலை நிர்வகித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றார்.

மறுநாள் காலையில் கோயிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை சிலைகள் திருடப்பட்டிருந்தது. அந்த சிலைகள் அனைத்து ஐம்பொன் சிலைகள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தபோது, சிலைகளை திருடி ஆட்டோவில் எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ நம்பரை வைத்து கன்னிகாபுரம் வெங்கடேசபுரம் புதிய காலனி பகுதியை சேர்ந்த டிரைவர் நவீன் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அருண்குமார் என்பவர் கோயிலில் சிலைகளை திருடி நவீன்குமாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து ஆட்டோ மூலம் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடமிருந்து திருடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டது. கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Input from: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News