பெண்களிடம் தவறாக நடப்பதாக புகார் அளித்தவர் வீட்டில் ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்திய கிருஸ்துவ பாதிரியர்
By : Thangavelu
திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக வீடு முன்பு தாக்குதல் நடத்தியதில் 2 பெண்கள் உட்பட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னஞ்சேரி பகுதியில் பரிசுத்த மெய் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாஸ்டராக உள்ள தாஸ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. பாஸ்டர் தாஸ் தேவாலயத்திற்கு வரும் ஒரு சில பெண்களிடம் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தேவாலயத்தின் கணக்கு வழக்குகளை சரிவர காட்டாமல் மறைப்பதாகவும் இருவருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வந்த நிலையில், இதன் காரணமாக பாஸ்டர் தாஸின் அடியாட்கள் நேற்று (மே 29) இரவு சார்லஸ் வீட்டின் உள்ளே புகுந்து அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா, மகன் உள்ளிட்டோர் மீது இரும்பு லாடு மற்றும் உருட்டு கட்டையால் சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாஸ்டர் தாஸ் அடியாட்களின் அட்டூழியம்.! வீடு புகுந்து சரமாரி தாக்குதல்..! | #Thiruvallur | #Attack | #Pastor | #cctvfootage pic.twitter.com/LYJVjdwnbq
— Polimer News (@polimernews) May 30, 2022
இதில் அவரது மனைவி விக்டோரியா மகள் சவிதா ஆகியோரின் தலையில் பலத்த காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சார்லஸ் வீட்டின் உள்ளே பாஸ்டர் தாஸின் அடியாட்கள் புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சார்லஸ் உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Polimer