Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்!

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2022 10:26 AM IST

கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கு சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த வழக்கில் சிறுமியின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சிறுமி அளித்த தகவலின்படி சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் போலீசார் அதிரடியான சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில் சேலம், ஓசூர், மருத்துவமனைகள் நேரில் ஆஜராகுமாறு ஈரோடு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பல மருத்துவமனைகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News