தமிழ்நாட்டில் முதல் முறையாக குழாய் வழியில் வீட்டுக்கு சமையல் எரிவாயு
By : Thangavelu
தமிழ்நாட்டில் முதல் முறையாக குழாய் வழியாக வீட்டுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும், இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் வீடுகளுக்கு குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக குழாய் வழியில் வீட்டுக்கு சமையல் எரிவாயு#Nagapattinam | #LPG pic.twitter.com/gMHr8DGjpH
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 19, 2022
இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த 4 மாவட்டங்களில் இது போன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த டோரன்ட் கேஸ் நிறுவனம் தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி முதல் முறையாக நாகை மாவட்டத்தில் சியாத்தமங்கை கிராமத்தில் குழாய் வழியாக சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இது பற்றி நாகை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் வீட்டுக்கு, வீடு குழாய் மூலம் கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu