பெயரளவில் மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கோவில் - விவரம் என்ன?
By : Thangavelu
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் நேற்று (ஜூன் 28) அகற்றப்பட்டது. இதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இது ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கமான பணி எனவும் கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.
மேலும், சன்னதி தெருவில் உள்ள கடைக்கு வெளியில் நிழலுக்காக அமைக்கப்பட்ட கூரைகள் மற்றும் நடைபாதை கடைகளை எடுக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடைபாதை கடை வைத்திருந்த ஒருவர் கூறியதாவது: எங்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் தெரிவிக்காமல் கடையை எப்படி அகற்றலாம் என கேள்வி எழுப்பினோம்.
அது மட்டுமின்றி மாநகராட்சிக்கு நாங்கள் வரி செலுத்துகிறோம். அப்படி இருந்து எப்படி கடையை அகற்றலாம் எனவும் கடைக்காரர்கள் கேட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் எதுவுமே தெரிவிக்கவில்லை என்றனர். அதே போன்று ஆண்டுதோறும் ஆக்கிரமிப்பு அகற்றுவது வழக்கம் என்று கடைக்காரர் கூறினார். மறுபடியும் பழையபடி கடைக்காரர்கள் கோயில் முன்பாக கடை வைப்பார்கள் எனவும் கூறினர்.
Source,Image Courtesy Dinamalar