புதர்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் மசராய பெருமாள் கோயில்: கண்ணீர்விடும் பக்தர்கள்!
By : Thangavelu
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் மசராய பெருமாள் கோயில் பராமரிப்பின்றி புதர்களாக காட்சி அளிக்கிறது.
நரசிம்மன்நாயக்கன் பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகே மிகவும் பழமையான மசராய பெருமாள் கோயில் உள்ளது. ஓடுகளால் அமைந்திருக்கும் இக்கோயில் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை 18 கிராம மக்கள் ஒன்றுகூடி மிகபிரமாண்டமாக திருவிழா நடத்துவது வழக்கம். இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்திருந்தும் தற்போது போதுமான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கோயில் திருவிழா நடத்தி பல ஆண்டுகளை கடந்து விட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். மேலும், இக்கோயிலுக்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் உள்ளது. தற்போதைய சூழலில் இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் பெறும். இதற்கிடையில் கோயில் வளாகம் பராமரிப்பின்றி முட்செடிகளாக வளர்ந்து புதர்களாக காட்சி அளிக்கிறது. எனவே அரசு உடனடியாக கோயிலை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar