இந்துக்களை இழிவுபடுத்தும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடக்கூடாது - காடேஸ்வரா சுப்பிரமணியம்!
By : Thangavelu
ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில இணை அமைப்பாளர் ராஜேஸ் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது: இந்து கோயில் நிலங்களில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், திண்டுக்கல்லில் தி.மு.க. எம்.எல்.ஏ., காந்திராஜன் அழகான பெண்களுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும் என்று பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
தி.மு.க.வை பொறுத்தமட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி உள்ளிட்டோர் பெண்களை வர்ணித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையும் தாண்டி வி.சி.க. தலைவர் திருமாவளவன், எங்களின் இளைஞர்களுக்கு மிகவும் சக்தி, திறமை இருப்பதால் கலப்பு திருமணம் செய்கின்றனர் என்று பேசியுள்ளார். எனவே இந்துக்களை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு ஓட்டு போடக்கூடாது. இவ்வாறு காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.
Source, Image Courtesy: Dinamalar