Kathir News
Begin typing your search above and press return to search.

"மினிஸ்டர் வீட்டு விசேஷத்திற்கு வராத பொதுமக்களுக்கு குடிநீர் கிடையாது" தி.மு.க நிர்வாகியின் வரம்பு மீறிய அட்ராசிட்டி!

மினிஸ்டர் வீட்டு விசேஷத்திற்கு வராத பொதுமக்களுக்கு குடிநீர் கிடையாது தி.மு.க நிர்வாகியின் வரம்பு மீறிய அட்ராசிட்டி!
X

DhivakarBy : Dhivakar

  |  6 July 2022 8:30 PM IST

விருதுநகர்: "மினிஸ்டர் வீட்டின் விசேஷத்தில் பங்கேற்காத மக்களுக்கு குடிநீர் கிடையாது" என்று கூறி தி.மு.க நிர்வாகி ஒருவர், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கின் மின்சார பியூஸ் கட்டையை, பிடுங்கி எடுத்துச் சென்றுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், தி.மு.க கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. உள்ளாட்சி தி.முக மக்கள் பிரதிநிதிகளும் மக்களிடம் அதிருப்தியை பெற்று வருவதால், கட்சி தலைமை மிகவும் அதிர்ச்சியில் உள்ளது.


இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, தலைமைக்கு மேலுமொரு இடியாக அமைந்துள்ளது.


தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனின் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது.


இந்த திருமண வரவேற்பு விழாவில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்துமாறு நாளிதழ் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


மேலும் தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள், உள்ளூர் மக்களை நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு வற்புறுத்தி அழைத்துள்ளனர்.


அதன் வரிசையில், தி.மு.க மாவட்ட மீனவர் அணி நிர்வாகி சொக்கலிங்கம், கலைஞர் நகர் பகுதி பொதுமக்களிடம் "கட்டாயம் கலந்துக்கணும்னு" வற்புறுத்தியுள்ளார். ஆனால் அப்பகுதி மக்களுக்கு விருப்பம் இல்லாததால் அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.


இதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், ஞாயிற்றுக்கிழமை அன்று, அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் குடிநீர் டேங்கின் பியூஸ் கட்டையை பிடுங்கிவுள்ளார்.




இதனை அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் "கட்டாயம் ஃபியூஸ் கட்டைகளை வாங்கி மறுபடியும் மாட்டிவிடுவோம்னு' என்று கூறி உறுதியளித்த பின்புதான் மறியலை மக்கள் கைவிட்டனர்.


தி.மு.க ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை, விளம்பரங்கள் மூலம் செலவு செய்து மக்களிடம் பொய் பிம்பத்தை உருவாக்கி வரும் தி.மு.க தலைமைக்கு, இத்தகைய தி.மு.க நிர்வாகிகளின் செயல்கள், அந்த வெட்டி செலவீனங்களை வீணாக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

J Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News