கல்லூரி அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தி.மு.க பிரமுகர்! என்ன நடந்தது?
By : Dhivakar
மதுரை சேது பொறியியல் கல்லூரி அதிபரிடம், 5.46 கோடி ரூபாய் மோசடி செய்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பி.எம் ரெட்டி என்ற முத்துவேல். இவர் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க துணை அமைப்பாளராக இருந்துள்ளார். வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரபலமான இவர். பல தொழில் அதிபர்களிடம் பணம் மோசடி செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த தொழில் அதிபரிடம், பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமினில் வெளியில் சுற்றிவந்துள்ளார்.
இந்நிலையில் முத்துவேலின் கை வரிசையில், மதுரை பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் முகமது ஜலீலும் இடம்பெற்றுள்ளார்.
200 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறியதன் பெயரில், ஜலீல் முத்துவேலிடம் 5.46 கோடி ரூபாயை இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, ஜலீல் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க'வின் உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகளால், தி.மு.க தலைமை அதிருப்தியடைந்துவரும் நிலையில், இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.