இந்து முன்னணியின் தொடர் கோரிக்கையால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தரிசன கட்டணம் ரத்து!
By : Dhivakar
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்களிடம் வசூலிக்கப்படும் தரிசன கட்டணத்தை ரத்து செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில் " இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம்" என்ற தலைப்பில், ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நெடிய பிரச்சார பயணத்தை இந்து முன்னணி அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
பிரச்சாரப் பயணத்தின் போது, இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அதில் ஒன்று " சினிமா தியேட்டர், விளையாட்டுப்போட்டிகள் மற்றும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதை போல், கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்" என்று பிரச்சாரத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களில் ஒன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அக்கோயிலில் சிறப்பு கட்டணமாக 20 ரூபாய் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிறப்பு கட்டண வசூலை, இந்து சமய அறநிலையத்துறை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அக்கோயிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, "சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதை வரவேற்கிறோம்" என்று இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் " கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற சூழலை உருவாக்கிட, அனைத்துக் கோயில்களிலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்திட இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என்றும் கூறியுள்ளது.