கல்வியில் இந்துக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது: மதமாற்றம் அதிகரிப்பு! காடேஸ்வரா சுப்பிரமணியம்!
By : Thangavelu
கல்வியில் இந்துக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது, ஏராளமான மதமாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இந்து முன்னணி சார்பாக இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயணம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அந்த இயக்கத்தின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பிரசார பயணம் நேற்று (தஞ்சை) வந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம்: இந்து முன்னணி அமைப்பு தொடங்கப்பட்டத்தில் இருந்து இந்துக்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அதில் பல வெற்றியும் கண்டுள்ளோம். ஆனால் தற்போது ஒட்டுமொத்த இந்துக்களின் உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.
அதனை திரும்ப மீட்பதற்காகவே இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரசார பயணம் வருகின்ற ஜூலை 31ம் தேதி நிறைவடையும் போது வெற்றி பயணமாக அமையும். ஆனால் பிரசார பயணத்துக்கு அனைத்து வகையிலும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். மேலும், இடையூறு ஏற்படுத்தும்போது இன்னும் அதிகமான கூட்டம் வரும்.
மேலும், மத்தியில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். இதன் காரணமாகவே காஷ்மீர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இந்துக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. ஏராளமான மதமாற்றங்கள் நடைபெறுகிறது. கோயில் சொத்துக்கள் அரசிடமும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் சொத்துக்கள் அவர்களிடமே வைத்துள்ளனர். இதனை சரி சமயாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar