துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் - வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
By : Thangavelu
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காந்திகிராம பல்கலையில் புதிய துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் இருப்பதாக கூறி ஆட்சி மன்ற குழுவினர் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் மத்திய பல்கலை மையமாக மாற்றுவதற்கு திட்டம் இருப்பதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ணூடந்த 1956ம் ஆண்டு காந்தி சீடர்களால் துவக்கப்பட்ட இந்த நிறுவனம் 1976ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய அரசு நிதியுதவி பெறும் பல்கலையாக மாற்றப்பட்டது. மேலும், மத்திய பல்கலையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. துணைவேந்தரை தலைவராக இருக்கின்ற இந்த பல்கலையில் மூத்த பேராசிரியர் மற்றும் மத்திய உயர்கல்வி அமைச்சகம் சார்பில் 4 பேர், வேந்தர் நியமிக்கும் 3 பேர் உட்பட மொத்தம் 12 ஆட்சி மன்ற குழுவாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரங்கநாதனை உடனடியாக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதுச்சேரி பல்கலை துணை வேந்தர் குர்மித் சிங் வேந்தர் பொறுப்பை கவனிப்பதற்காக கூடுதலாக வழங்கி இருப்பதாக பல்கலைக்கு மத்திய உயர்கல்வி அமைச்சகத்திடம் மெயில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar