பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்த தி.மு.க கிளைச் செயலாளரின் மகன்!
By : Dhivakar
விருதுநகர்: தி.மு.க கிளைச் செயலாளர் மகன் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், தி.மு.க உள்ளாட்சி மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கருத்துக் கூறி வருகின்றனர். இச் செய்தி தி.மு.க தலைமைக்கு தலைவலியாக மாறிவிட்டது என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், வீர குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனியாக நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க கிளைச் செயலாளர் முருகனின் மகன் ஹரி கிருஷ்ணன், அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அப்பெண் கூச்சலிட ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். ஆரம்பத்தில் நடவடிக்கை எடுப்பது போன்று காண்பித்துக்கொண்ட காவல்துறையினர், பின்பு அரிகிருஷ்ணன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தி.மு.க நிர்வாகிகள் பலர் அப்பெண்ணிடம் புகாரை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தருவதாக அப்பெண் வருத்தத்துடன் கூறியுள்ளார்.