சென்னை:மாற்று மதத்தை சேர்ந்தோர் தாய் மதமான 'ஹிந்து மதம்' திரும்பினர்!
By : Dhivakar
சென்னை: விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்த, தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மாற்று மதத்திலிருந்து தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பினர்.
வெவ்வேறு காரணங்களுக்காக தாய் மதமான ஹிந்து மதத்தை விட்டு மாற்று மதத்திற்கு மாறியவர்கள், மீண்டும் தாய் மதமான ஹிந்து மதத்தை நோக்கித் திரும்பும் நிகழ்வுகள் சமீபத்தில் அதிகமாக நடைபெறுகிறது.
இதன் வரிசையில் நேற்று பவுர்ணமி தினத்தன்று, விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்த தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில், பத்துக்கும் மேற்பட்ட மாற்று மதத்தினர், சாஸ்திர முறைப்படி முறையாக தாய் மதமான ஹிந்து மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்தன்று, இந் நிகழ்ச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. பின்னர் மாற்று மதத்திலிருந்து தாய் மதம் திரும்பியவர்களுக்கு அரசு விதிப்படி முறையான அங்கீகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுகிறது.
"மாற்று மதத்தில் இருந்து மீண்டும் தாய் மதமான ஹிந்து மதத்தை ஏற்க நினைப்பவர்கள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சனாதன தர்மத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை ஹிந்து சமுதாயம் பாராட்டி வருகிறது.