நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை: நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சம்!
By : Thangavelu
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உட்பட பல பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள குந்தா மற்றும் பைக்காரா உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், நீலகிரியில் ஊட்டி, குந்த, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகா பகுதிகளிலும் நேற்று இரவும் விடிய, விடிய மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. மழை பெய்து வரும் தாலுகாவில் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar