நீலகிரியில் நீடிக்கும் கனமழை: பேரிடர் மீட்பு படை விரைவு!
By : Thangavelu
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மரங்கள் சாய்ந்தும், மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீரமைக்கின்ற பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், கிராமத்துக்கு செல்லும் சில சாலைகளில் இருந்த பாலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரியம்மன் கோயில் மீது மரம் சாய்ந்து ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
மேலும், மழை தொடர்ந்து பெய்வதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து மீட்பு படை வீரர்கள் இன்று காலை கூடலூர் வந்தடைந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அப்பர் பவானி 324 மி.மீ., அவலாஞ்சி 320 மி.மீ., எமரால்டு 108 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மழை பாதிப்புக்கு உள்ளான இடங்களில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar