குடிநீருக்காக அரசுப் பள்ளிமாணவர்கள், பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து செல்லும் அவலம்!
By : Dhivakar
மதுரை: அரசு பள்ளி மாணவர்கள் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று வரும் அவலம், அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களில் ஆளாகின்றனர். "சட்டம் -ஒழுங்கு மற்றும் நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும் அரசு ஒழுங்காக இயங்க வில்லை" என்று அனைத்து தரப்பு மக்களும் விமர்சித்து வருகின்றனர்.
இதன் வரிசையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள், பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால், குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குடிநீர் பெற்றுவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
"உசிலம்பட்டி அரசு பள்ளியில் விரைந்து குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"தி.மு.க ஆட்சியின் ஓராண்டு நிறைவை, அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, மக்களிடையே பிரச்சாரம் செய்ய அரசு கவனம் செலுத்தி வருவதை விட்டுவிட்டு, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.