மதுரை திருவாதவூர் அருகே காளியம்மன் கோயில் உண்டியல் கொள்ளை!

By : Dhivakar
மதுரை: திருவாரூர் அருகே மர்ம நபர்களால் காளியம்மன் கோயில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்து சாமி சிலைகள் உடைப்பு சம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணம் சிறுவாச்சூர் தொடர் சாமி சிலைகள் உடைப்புச் சம்பவம். அதேபோல் பல கோயில்களில் மர்மநபர்களால் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருவாரூரில் பபிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது. அக்கோயிலுக்கு தினந்தோறும் அப்பகுதி பக்தர்கள் பெருமளவு தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மர்மநபர்களால் அக்கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் அவ்வூர் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தீவிர விசாரணை நடத்தி, கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்" என்று காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
