கிருஷ்ணகிரி: மாரியம்மன் கோயில் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள்! பக்தர்கள் வேதனை!

By : Dhivakar
கிருஷ்ணகிரி: கோடி மாரியம்மன் கோயில் அருகில் இரண்டு மதுபான கடைகள் இயங்கி வருவதால், அக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மன வேதனையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து விரோத செயல்கள் தலைதூக்கி வருகிறது. இந்து மத தெய்வங்கள் மற்றும் நம்பிக்கைகள் அவ மதிக்கப்படுவது, கோவில் சாமி சிலைகள் சேதப்படுத்துவது என பல இந்து விரோத சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. "இதனை தடுத்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து மத உணர்வாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் வரிசையில், கிருஷ்ணகிரி நகரம் பாப்பாரப்பட்டியிலுள்ள பிரசித்தி பெற்ற கோடி மாரியம்மன் கோவில் அருகில், தமிழக அரசு நடத்தும் இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் கோயிலுக்கு அன்றாடம் செல்லும் பக்தர்கள், அருகில் மதுபான கடைகள் இயங்கி வருவதால் மனவேதனைக்குள்ளாகின்றனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பும், பாப்பாரப்பட்டி மக்களும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாரியம்மன் கோயில் அருகேவுள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மனு அளித்தனர்.
