திருவண்ணாமல கலெக்டர் அலுவலகம் எதிரில் இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி! ஏன் தெரியுமா?
By : Dhivakar
திருவண்ணாமலை: அரசு அதிகாரிகளின் செயல்களால் மன வேதனையடைந்த, இரு குடும்பத்தினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்ற சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக அரசு இயந்திரம் ஒழுங்காக இயங்கவில்லை என்று, பலரும் விமர்சித்து வருகின்றனர். அரசு அலுவலர்கள் சாமானிய மக்களிடம் லஞ்சம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
அதன் வரிசையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு சம்பவங்கள் ஒரே நாளில் அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் துள்ளுக்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். முனியம்மாள் தன் சொந்த நிலத்தில் விளைவித்த பொருட்களை, ஒருவர் அபகரித்துள்ளார் மேலும் முனியம்மாளையும் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற முனியம்மாளிடம், காவல் ஆய்வாளர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தனக்கு நியாயம் வேண்டி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக முனியம்மாளின் தீக்குளிப்பு முயற்சியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இது ஒருபுறமிருக்க, அதே திருவண்ணாமலை மாவட்டத்தின் வட ஆண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 'சேகர்' என்பவரின் நிலத்தை, அதிகாரிகள் முறைகேடாக வேறு ஒருவருக்கு பட்டா பதிவு செய்ததை எதிர்த்து, சேகர் குடும்பத்தினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முன்பு இரு தீக்குளிக்க முயன்ற சம்பவங்களால், மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.