இளைஞர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கும் புதிய கல்விக்கொள்கை - பிரதமர் மோடி
By : Thangavelu
புதிய கல்விக்கொள்கை இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் சுதந்திரத்தை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: மாணவர்களின் கனவை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு என்னுடைய நன்றிகள். சிங்கள்தான் தேசத்தை கட்டமைப்பவர்கள். நாளைய தலைவர்கள் நீங்கள். உங்களின் சாதனையை கொண்டாடுவதற்கு இங்கு கூடியிருக்கோம். அனைத்து நாடுகளுமே இந்தியாவை உற்று நோக்குகிறது.
கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்துள்ளார். இளைஞர்கள்தான் வளர்ச்சியின் இன்ஜின்கள். உலகத்தின் வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறியுள்ளது. ஒட்டுமொத்த உலகத்தின் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தை பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றை இந்தியா மிகச்சிறப்பாக கையாண்டு வாகை சூடியது.
மேலும், பாரத ரத்னா அப்துல் கலாம் அண்ணா பல்கலையோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவர் தங்கியிருந்த அறை தற்போது நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களை வரவேற்பதற்காக உலகளவில் நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. முந்தைய காலங்களில் ஒரே இடத்தில் பணியாற்றி மாத சம்பளம் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். தற்போது இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து இளைஞர்கள் முன்னேறுவதற்கு உழைக்க வேண்டும். அதே நேரத்தில் புதிய கல்வி கொள்கை இளைஞர்களுக்கு பெயரளவில் சுதந்திரத்தை அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar