மதப் பிரச்சாரம் செய்ய வந்தவர்களின் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமத்தை பூசிய கிராம மக்கள்!
By : Dhivakar
வேலூர்: பொது மக்களிடம் மத மாற்ற பிரச்சாரம் செய்ய முயற்சித்தவர்களின் நெற்றியில் கிராமமக்கள் விபூதி பூசி திருப்பி அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக சட்டவிரோதக் கட்டாய மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. "இந்து மக்களை அதிகளவில் குறிவைத்து மதப் பிரச்சார கும்பல் வேலை செய்கிறது. இதனை தடுத்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த சின்னசேரி எனும் கிராமத்தில், 15 நபர்கள் கொன்ட ஒரு கும்பல், வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து, சட்டவிரோத மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்செய்தியை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள், மதப்பிரச்சாரம் செய்யும் கும்பலை தடுத்து நிறுத்தி அவர்களின் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமத்தை பூசினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மதப் பிரச்சாரம் செய்ய வந்த கும்பலுக்கு பதிலடி கொடுத்து திருப்பி அனுப்பிய சின்னச்சேரி ஊர் பொதுமக்களை இந்து அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.