"மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்திட 'யோகா' கற்றுத் தர வேண்டும்"- இந்து முன்னணி மாநில தலைவர் கோரிக்கை!
By : Dhivakar
சென்னை: "தமிழக மாணவர்களின் தற்கொலை செய்திகளை காணும்போது, மனம் பெருந்துயரத்திற்கு உள்ளாகிறது" என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள், தமிழக மக்களை மன வேதனையடையச் செய்துள்ளது. இதனால் மாணவ சமுதாயத்தின் நலன் கருதி, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் : தமிழகத்தில் மாணவ மாணவியரின் தொடர் தற்கொலை செய்திகளை காணும்போது மனம் பெருந்துயரத்திற்கு உள்ளாகிறது. நாட்டின் எதிர்காலத் தூண்களாக வலம் வர வேண்டிய மாணவர்கள் தங்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை காரணமாகவே தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்திட பள்ளி, கல்லூரிகளில் யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சி அளித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று கூறியுள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவரின் இந்தக் கருத்துக்கள் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது கருத்தை ஏற்று மாணவ மாணவிகளுக்கு யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.