தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் படுகொலை! காரணம் என்ன?
By : Dhivakar
விழுப்புரம்: தி.மு.க நிர்வாகியை மர்ம கும்பல் ஒன்று, கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கோட்டக்கரையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஆளும் கட்சியான தி.மு.க'வில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கோட்டக்கரையில் இருந்து, திருச்சிற்றம்பலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது, 3 மர்ம நபர்கள் வழிமறித்தனர். கத்தியை காட்டி ஜெயக்குமாரை தாக்க முயன்றனர். உடனடியாக ஜெயக்குமார் மர்ம கும்பலிடமிருந்து தப்பித்து ஓடினார், ஓடிய ஜெயக்குமாரை மர்ம கும்பல் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
இதுகுறித்து ஆரோவில் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஆளும்கட்சியான தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொது இடத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது" என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.