Kathir News
Begin typing your search above and press return to search.

அறக்கட்டளை வசமே சென்ற அகஸ்தியர் கோவில் - அறநிலையத்துறைக்கு குட்டு!

அறக்கட்டளை வசமே சென்ற அகஸ்தியர் கோவில் - அறநிலையத்துறைக்கு குட்டு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2022 7:21 AM IST

இந்து சமய அறநிலையத்துறை வசம் இருந்த சென்னை தி.நகர் அகஸ்தியர் கோவில், நீதிமன்ற உத்தரவின்படி அதனை நிர்வகித்து வந்த அறக்கட்டளையிடமே ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, தி.நகர், பாண்டிபஜார் பகுதி, பார்த்தசாரதிபுரத்தில் அகஸ்தியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது, தமிழகத்தில் உள்ள, 264 சித்தர் ஸ்தலங்களில் ஒன்றாகும். அறக்கட்டளை வசம் இருந்த இந்த கோவில், நிர்வாக முறைகேடு நடந்ததாக கூறி, 2013ல் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது.

இதையடுத்து, இக்கோவில் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலின் உபகோவிலாக இணைக்கப் பட்டது. அறநிலையத்துறை கட்டுபாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து, கோவில் டிரஸ்ட் சார்பில் கிருஷ்ணசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவிலை மீண்டும் டிரஸ்டி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.இதையடுத்து, கோவில் மீண்டும் அதனை நிர்வகித்து வந்த அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Input From: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News