Kathir News
Begin typing your search above and press return to search.

கோயிலில் சாமி சிலைகள் உடைப்பு: மர்ம நபர்களின் அட்டூழியமா? துருவி எடுக்கும் போலீஸ்!

கோயிலில் சாமி சிலைகள் உடைப்பு: மர்ம நபர்களின் அட்டூழியமா? துருவி எடுக்கும் போலீஸ்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2022 8:46 AM IST

கோவில் சிலை உடைப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் அரிசன காலனியில் மதுரைவீரன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் சிலைகள் உள்து. அதிகாலை அப்பகுதி பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அப்போது சாமி சிலைகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலை உடைக்கப்பட்ட தகவல் ஊர் முழுவதும் பரவியதால் பொதுமக்கள் பலர் அங்கு கூடினார்கள்.

என்ன நடந்தது?

கோவிலில் உள்ள சிலைகள் சில உடைக்கப்படும் வேல்கள் பிடுங்கி எறியப்பட்டு கீழே கிடந்தது. சிலையின் தலைப்பகுதி வலுவான பொருள் கொண்டு அடித்து உடைக்கப்பட்டு இருந்தது. அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Input From: DT

Next Story
கதிர் தொகுப்பு
Trending News