Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் மண்டபங்களை இஸ்லாமிய மத வழிபாட்டு இடமாக மாற்றி அபகரிப்பு: மலைமண்டல பெருமாள் கோவிலில் நடப்பது என்ன?

கோவில் மண்டபங்களை இஸ்லாமிய மத வழிபாட்டு இடமாக மாற்றி அபகரிப்பு: மலைமண்டல பெருமாள் கோவிலில் நடப்பது என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2022 11:53 AM GMT

சதுரங்கப்பட்டினத்தில், கோயில் மண்டபம் இஸ்லாமிய வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கோவில் மண்டபத்தை மீட்க ஆய்வு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் பகுதியில், மலைமண்டல பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலுக்கு கிழக்கில், ஊஞ்சல், உறியடி மண்டபங்கள் உள்ளிட்டவற்றுடன், 1.20 ஏக்கர் பரப்பிலான வளாகம் உள்ளது. மண்டபங்கள், விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இவ்வளாகம் பராமரிக்கப்படாமல், மண்டபங்கள் சீரழிந்து, முட்புதர் சூழ்ந்தது. கோயில் ஊழியர்களுக்கு கூட இப்படி ஒரு இடம் இருப்பது தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாமியர், அவ்வப்போது, இவ்வளாகம் வந்து சென்றுள்ளனர்.இப்பகுதியினர் புதரை அகற்றி. உள்ளே சென்று கவனித்தபோது, சீரழிவு மண்டபங்களை இஸ்லாமிய மத வழிபாட்டு இடமாக மாற்றியது தெரிந்தது.

இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, இவ்விடத்தை மீட்க, தொடர்ந்து வலியுறுத்தினர். ஆய்வு தொடங்கியது. மண்டபங்களில், யோக நரசிம்மர் உள்ளிட்ட ஹிந்து மத வழிபாட்டு சிலைகள் மற்றும் விஜயநகர கால வடிவமைப்புடன் உள்ளதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அறிக்கை அளிப்பதாகவும், அதன் அடிப்படையில், கோட்டாட்சியரிடம் முறையிட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News