தி.மு.க பெண் கவுன்சிலர் ராஜினாமா - நான் எதிர்பார்த்து வந்த அரசியல் களமாக இது இல்லை என வேதனை!
By : Kathir Webdesk
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 30ல் தி.மு.க., வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் வேட்பாளராக, ஏழாவது வார்டு கவுன்சிலர் நர்மதா மற்றும் 10வது வார்டு கவுன்சிலர் சியாமளா ஆகியோரிடையே போட்டி நிலவியது.
கட்சி தலைமை, நகராட்சி தலைவராக சியாமளாவை அறிவித்தது. கவுன்சிலர் நர்மதா, ஆளுங்கட்சியாக இருந்தாலும், குறைகளை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பி வந்தார்.
இந்நிலையில், நகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் கமிஷனர் தாணுமூர்த்தியிடம், நர்மதா கடிதம் வழங்கினார்.
சொந்த காரணங்களுக்காக என் பதவியில் தொடர முடியாததால், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன். நான் எதிர்பார்த்து வந்த அரசியல் களமாக இது இல்லை.
எனவே, அரசுப்பணியில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன். தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி மீண்டும் அமையும் வகையில், நகர மன்றத்தின் செயல்பாடுகள் இருக்கும் என நம்புகிறேன் எனக்கூறினார்.
Input From: DT