Kathir News
Begin typing your search above and press return to search.

இனி நூறு நாள் வேலைத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு!

இனி நூறு நாள் வேலைத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2022 1:29 AM GMT

நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி ஒன்று முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 214 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருகைப் பதிவை டிஜிட்டல் மயாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது.

தேசிய அளவில் பயன்படுத்தப்படும் இந்த செயலியில், வருகைப் பதிவு தேதி, மாநிலம், மாவட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து, பணியாளருக்கான பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் நாள்தோறும் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த செயலி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாய அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளர்கள் அனைவரும் தங்களின் வருகைப் பதிவை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

Input From: News On Air

Next Story
கதிர் தொகுப்பு
Trending News