ரகசியம் காக்கும் ஆளுநர்: பீதியில் செய்வதறியாது பதறும் கூட்டம்: அடுத்த ஆட்டம் ஆரம்பமா?
By : Kathir Webdesk
தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே நல்லுறவு இல்லை. ஏனென்றால், ஆளுநர் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று தி.மு.க.வும், அரசும் கவலையில் உள்ளன. ஆளுநரை கண்காணிக்க அரசு தங்கள் சொந்த உளவுத்துறையை பயன்படுத்துகிறது.
ஆளுநர் ரவி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாவார். மத்திய உளவுத்துறையில் பணியாற்றியவர், எனவே தன் வேலைகளை அவர் ரகசியமாகவே செய்வார் என்கின்றனர், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள்.
கவர்னர் ரவி சமீபத்தில் புதுடெல்லி சென்றார். தமிழக அரசு காரை பயன்படுத்தாமல் தனது தனிப்பட்ட காரை பயன்படுத்தினார். அவர் ஒரு பாதுகாப்பு அதிகாரியை மட்டுமே தன்னுடன் அழைத்துச் சென்றார், அவர் எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார் என்பது கார் ஓட்டுநருக்கும் உடன் வரும் பாதுகாப்பு அதிகாரிக்கும் தெரியும். அதாவது கவர்னர் வருகையின் போது என்ன நடந்தது என்ற முழு விவரம் தமிழக போலீசாருக்கு தெரியவில்லை.
ஆளுநரின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம், எனவே அவரது வருகையின் போது எந்த பிரச்சனையும் ஏற்பட வேண்டாம் என்று தமிழக காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் தனது சந்திப்புகளை அவர்களிடம் இருந்து ரகசியமாக வைத்திருந்தார்.
Input From: Dinamalar