"திராவிட மாடல்" என்றால் தமிழில் என்ன? ஐகோர்ட் கேள்வியால் கிறுகிறுத்துப் போயிருக்கும் தி.மு.க!

தி.மு.க.வினர் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்துகின்றனர், வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியை திராவிட மாதிரி ஆட்சி என்று சிலர் நினைக்கிறார்கள், இதற்கு முன்பும் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன.
திராவிட மாடல் என்பதே ஆங்கில வார்த்தைதான். ஆகவே, அதை முதலில் தி.மு.க.வினர் தமிழில் மாற்றட்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். இப்போது உயர் நீதிமன்றமும் அதனை உறுதிபடுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்கக் கோரிய வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
தமிழை வளர்க்க அனைத்து துறைகளும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகை வைத்த நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
திராவிட மாடல் என்பதில் ஆங்கிலத்திற்கு பதிலாக முழுவதும் தமிழிலேயே பயன்படுத்தலாமே? ஏன் ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும். திராவிட மாடலுக்கு தமிழ்ச் சொல்ல என்ன?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
Input From: Dinamalar